தொலைநோக்கு

அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அதனையொத்த ஏனைய நிறுவனங்கள் என்பவற்றில் சேவையாற்றும் அலுவலர்களால் இழைக்கப்பட்ட நிர்வாக அநீதிகளை ஒழிக்கும் பொருட்டு விசேடமாக நடுநிலமை, வௌிப்படைத் தன்மை  என்பன  ஒருங்கமைந்தவாறான பாதுகாப்பானதும், நீதியானதும்,மற்றும் நேர்மையானதும் ஆன தீர்மானங்களை வழங்குவதனூடக சிறந்த மக்கள் சேவையை உறுதிப்படுத்துவதற்கு சகல முயற்சிகளையும் எடுப்பதே எமது தொலைநோக்கமாகும்.

பணி

அரசாங்க நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், நியதிச் சட்ட சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் பகுதியளவிலான அரசாங்க நிறுவனங்கள் என்பவற்றில் பணிபுரியும் அலுவலர்களால் புரியப்படும்  மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட முறைப்பாடுகளை நடுநிலமையாக புலனாய்வு செய்து அதன்பின்னர் அம்மீறல்களுக்கு பரிகாரமாக ஏற்புடையதான கட்டளைகள், தீர்மானங்கள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் என்பவற்றை வழங்குதல் ஆகும். நிர்வாக அநீதிகள் மற்றும் இலங்கை குடியரசின் அரசியலமைப்பில் குறித்துரைக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல்கள் என்பன உள்ளடங்களாக வேறுவகையான ஏனைய அநீதிகளும் மேலே கூறப்பட்ட மீறல்களுள் உள்ளடங்குவன ஆகும்.

பிரதான பணிகள்

  • அரசாங்க திணைக்களங்கள், அரசாங்க கூட்டுத்தாபனங்கள், மாகாணசபைகள் அல்லது அத்தகைய ஏனைய நிறுவனம் என்பவற்றில் பணிபுரியும் அலுவலர்களால் புரியப்பட்ட அடிப்படை உரிமை மீறல்கள் அல்லது அதனையொத்த வகையான அநீதிகளை ஒழிக்கும் பொருட்டு பொதுமக்களால் ஒம்புட்சுமானுக்கு முன்வைத்த முறைப்பாடுகள் தொடர்பில் புலனாய்வை நடாத்துதலும், தவறாக வழங்கப்பட்ட நிர்வாக தீர்மானங்கள் தொடர்பில் கோரிக்கை விடுத்தலும் ஆலோசனை வழங்குதலும் மற்றும்/அல்லது பரிந்துரை வழங்குதலும் ஆகும்.
  • பாராளுமன்ற உறுப்பினரொருவரால் பாராளுமன்ற பொதுமனுக்கள் குழுவின் ஊடாக இவ்வலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகள் மேலே கூறப்பட்ட ஏதாவது உரிமை மீறலொன்றிற்குள் உள்ளடங்குமாயின்,அம்முறைப்பாடுகள் தொடர்பில் இவ்வலுவலகம் புலனாய்வு செய்து தீர்வுகளை வழங்குகிறது.
  • எமது நிறுவனத்தின் பிரதான பணிகளுக்கு  அமைய, எமது நாட்டின் நீதிகள் மற்றும் அதற்கு அமைய உருவாக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் என்பவற்றுக்கு உட்பட்டு இலங்கை அரசாங்கத்தின் நிர்வாகப் பொறிமுறையொன்றின் ஊடாக, அடிப்படை உரிமை மீறல்களால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகும்.

ஒம்புட்ஸ்மனைப் பற்றி

நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளரின் (ஒம்புட்சுமான்) பங்கும் குறைதீர்வுகளைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளும்

ஒம்புட்சுமானின் பங்கு

அரசாங்க நிறுவனங்கள் அல்லது அரசாங்க கூட்டுத்தாபனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் அல்லது அதே போன்ற ஏனைய நிறுவனங்களில் உள்ள அரசாங்க அலுவலர்களினால் எடுக்கப்பட்ட நிர்வாக தீர்மானங்களினால் இழைக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல்கள் அல்லது ஏனைய அநீதிகளுக்கு எதிராக எந்தவொரு நபரும் குறைதீர்வை பெற்றுக்கொள்ளும் பிரதான நிறுவனமொன்றாக நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம் கருதப்படுகிறது.

நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளரின் (ஒம்புட்சுனானின்) நியமனம்

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 156 ஆவது உறுப்புரையினை வாசித்து அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் உறுப்புரை 41 (இ) இன் கீழ் தாபிக்கப்பட்ட ஓர் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் உறுப்புரை 41 (இ) இற்கு அமைய, அதிமேன்மைதகு சனாதிபதியினால் அரசியலமைப்பின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டு இப்பதவிக்கு பொருத்தமான நபர் நியமிக்கப்படுவார். பாராளுமன்ற தீர்மானமொன்றினை ஏற்றுக்கொணட பின்னர் மட்டுமே ஒம்புட்சுமானை பதவியிலிருந்து நீக்கலாம்.

ஒம்புட்சுமானின் தத்துவங்களும் பணிகளும்

1994 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டவாறான 1981 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்சுமான்) சட்டத்தினால் வழங்கப்பட்ட தத்துவங்களின் மூலம் அரசாங்க அலுவலரொருவரால் அல்லது மாகாணசபையொன்றின் அலுவலரொருவரால் அல்லது அரசாங்க கூட்டுத்தாபனம் அல்லது அதனையொத்த  ஏனைய நிறுவனமொன்றின் அலுவலரொருவரால் இழைக்கப்பட்ட அல்லது இழைக்கப்படும் அடிப்படை உரிமை மீறல்கள் அல்லது ஏனைய அநீதிகள் என்பவற்றின் கீழ் விசாரணை மேற்கொண்டு நியாயமான பரிந்துரைகளை வழங்குவதே ஒம்புட்சுமானின் பிரதான பணியாகும்.

ஒம்புட்சுமானுக்கு முறைப்பாடொன்று தாக்கல் செய்யும் வழிமுறை

1994 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க (திருத்தம்) நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஏதாவது அநீதி தொடர்பில் நபரொருவர் ஒம்புட்சுமானுக்கு நேரடியாக எழுத்தில் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு உரித்துடையவராவார். இவ்வலுவலகத்தினால் வழங்கப்படும் “ ஒஎம்பி -01” படிவத்தில் அவசியமான தகவல்கள் சமர்ப்பிக்கப்படுமானால் விசாரணை நடத்துவது வசதியாக இருக்கும். முறைப்பாடுகளை அலுவலகத்திற்கு வருகை தந்து சமர்ப்பிக்கலாம் அல்லது பதிவுத்தபால் மூலம் சமர்ப்பிக்கலாம் அல்லது சதாரண தபால் மூலம் சமர்ப்பிக்கலாம் அல்லது மின் அஞ்சல் செய்தி( E-Mail message) மூலம் சமர்ப்பிக்கலாம்.

அதேபோல், புலனாய்வு செய்து அறிக்கையிடும் பொருட்டு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, கௌரவ சபாநாயகர் ஊடாக பாராளுமன்ற உறுப்பினரொருவர் மூலம் பொதுமனுக்கள் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகள் ஒம்புட்சுமானுக்கு குறித்துரைக்கப்படுகின்றது.

முறைப்பாடொன்றினுள் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கியமான விடயங்கள்

  1. முறைப்பாடு சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிமையான மொழியில் (சிங்களம்/தமிழ்/ஆங்கிலம்) முன்வைக்கப்படுதல் வேண்டும்.
  2. எத்தீர்மானத்துக்கு எதிராக முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் எவ்வலுவலருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படுகிறதோ அவ்வலுவலரின் பதவியையும் அலுவலக முகவரியையும் தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும்.
  3. இழைக்கப்பட்ட அநீதியை எண்பிப்பதற்கான முக்கியமான ஆவணங்களின் புகைப்பட பிரதிகளை இணைப்பது பொருத்தமானதாக இருக்கும்.
  4. உங்கள் முறைப்பாடு தொடர்பில் இறுதியில் நீங்கள் எதிர்பார்க்கும் குறைதீர்வை தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும்.