ஒம்புட்ஸ்மனைப் பற்றி
நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளரின் (ஒம்புட்சுமான்) பங்கும் குறைதீர்வுகளைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளும்
ஒம்புட்சுமானின் பங்கு
அரசாங்க நிறுவனங்கள் அல்லது அரசாங்க கூட்டுத்தாபனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் அல்லது அதே போன்ற ஏனைய நிறுவனங்களில் உள்ள அரசாங்க அலுவலர்களினால் எடுக்கப்பட்ட நிர்வாக தீர்மானங்களினால் இழைக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல்கள் அல்லது ஏனைய அநீதிகளுக்கு எதிராக எந்தவொரு நபரும் குறைதீர்வை பெற்றுக்கொள்ளும் பிரதான நிறுவனமொன்றாக நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம் கருதப்படுகிறது.
நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளரின் (ஒம்புட்சுனானின்) நியமனம்
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 156 ஆவது உறுப்புரையினை வாசித்து அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் உறுப்புரை 45 இன் கீழ் தாபிக்கப்பட்ட ஓர் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் உறுப்புரை 41 (இ) இற்கு அமைய, அதிமேன்மைதகு சனாதிபதியினால் அரசியலமைப்பின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டு இப்பதவிக்கு பொருத்தமான நபர் நியமிக்கப்படுவார். பாராளுமன்ற தீர்மானமொன்றினை ஏற்றுக்கொணட பின்னர் மட்டுமே ஒம்புட்சுமானை பதவியிலிருந்து நீக்கலாம்.
ஒம்புட்சுமானின் தத்துவங்களும் பணிகளும்
1994 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டவாறான 1981 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்சுமான்) சட்டத்தினால் வழங்கப்பட்ட தத்துவங்களின் மூலம் அரசாங்க அலுவலரொருவரால் அல்லது மாகாணசபையொன்றின் அலுவலரொருவரால் அல்லது அரசாங்க கூட்டுத்தாபனம் அல்லது அதனையொத்த ஏனைய நிறுவனமொன்றின் அலுவலரொருவரால் இழைக்கப்பட்ட அல்லது இழைக்கப்படும் அடிப்படை உரிமை மீறல்கள் அல்லது ஏனைய அநீதிகள் என்பவற்றின் கீழ் விசாரணை மேற்கொண்டு நியாயமான பரிந்துரைகளை வழங்குவதே ஒம்புட்சுமானின் பிரதான பணியாகும்.
மேலே குறிப்பிடப்பட்ட அலுவலர்கள் பின்வரும் நிறுவன கட்டமைப்பினுள் உள்ளடக்கப்படுகின்றனர்.
அரசாங்க நிறுவனங்கள்
ஒம்புட்சுமானால் புலனாய்வு செய்யப்படாத முறைப்பாடுகள்
- தொழில்கள்/வீடுகளுக்கான கோரிக்கைகள். ( சட்டத்தின் பிரிவு 10 (2).
- பொதுமக்கள் பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் தொடர்புபட்ட விடயங்கள். (சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (1) .
- ஆயுதப்படைகள், பொலிஸ் படைகள் அல்லது பொதுமக்கள் ஒழுங்கைப் பேணுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள ஏனைய படைகளில் உறுப்பினரொருவரின் சேவை நியதிகள் நிபந்தனைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் (சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (111)
- நீதிமன்றத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானமொன்று அல்லது நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள விடயங்கள் ( சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (iv) ).
- அரசாங்க அலுவலர்களின் நியமனங்கள், இடமாற்றங்கள், பதவி விலகல்கள் அல்லது ஒழுக்காற்று கட்டுப்பாடுகள் தொடர்பிலான முறைப்பாடுகள். (சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (v).
- கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் கணக்காய்வு செய்தல் தொடர்பிற்குட்பட்ட, உட்படுகின்ற விடயங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள். (சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (vi)
- முறைப்பாட்டாளர் முறைபாடு செய்வதில் காலதாமதம் ஏற்படுதல் (நியாயமற்ற காலதாமதம்) (சட்டத்தின் பிரிவு 13 (1) (இ) ).
- பொதுகொள்கைகள் அல்லது அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பிலான விடயங்கள்.
- தேர்தல் ஆணையாளரின் தேர்தல் நடவடிக்கைகள்.
- சொந்த கம்பனிகள் உள்ளடங்கலாக சொந்த குழுக்களுக்கிடையிலான பிரச்சனைகள் தொடர்பிலான முறைப்பாடுகள்
- அநாமோதைய அல்லது கையொப்பமிடப்படாத முறைப்பாடுகள்.
