வரலாறு மற்றும் கடந்தகால ஒம்புட்ஸ்மன்

அலுவலகத்தின் ஆரம்பமும் விரிவாக்கமும்

1981 ஆம் ஆண்டு கொழும்பு 04, காலி வீதி, இலக்கம் 222 என்னும் முகவரியில் இவ்வலுவலகம் அமைக்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டின் திருத்தங்கள் 1981 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 1991 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கச் சட்டம் மூலம் சில உறுப்புரைகள் திருத்தப்பட்டன. 1989 இல் இவ்வலுவலகம் கொழும்பு 03, காலி வீதி, இலக்கம் 594/3 என்னும் முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. முதலாவது நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் பதவி நிலையானது ஓய்வூதியப் பதவியாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஓய்வூதியப் பிரமாணக்குறிப்பின் 24 ஆவது உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய திரு.எஸ்.எஸ்.விஜேசிங்க அவர்களுக்கு ஓய்வூதிய உரிமைகள் அளிப்பதற்கு 1991.08.02 ஆம் திகதி வர்த்தமானியில் அறிவித்தல் வெளியிடப்பட்டது.

முதலாவது ஒம்புட்ஸ்மன்   –      07.09.1981 – 31.07.1991

திரு. சம்சன் சேன விஜசிங்க
1948 – 1963 – அரசாங்க வழக்கறிஞராக தொழிற்பட்டார்
1964.10.27 – 1972.05.22 அமைச்சரவையின் செயலாளராக அதன்பின்னர்
1972.05.23 -1978,09.07 தேசிய அமைச்சரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1978.09.08 – 1981.08.07 பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமாக கடமையாற்றிய பின்னர் ஓய்வூபெற்றார். இவர் நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலக தாபிப்பில் முக்கியமான பங்கு ஆற்றியதுடன் இவ்வலுவலகத்திற்கு பெருமளவில் பங்களிப்பு செய்துள்ளார். இவ்வலுவலகத்தின் முக்கியமான அலுவலராக கருதப்படுகிறார்.

இரண்டாவது ஒம்புட்ஸ்மன்    –     01.08.1991 – 20.08.1993  

திரு.எல்.ஏச்.டீ.அஸ்வின் (முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி)
(லூஷன் கெக்டர் டீ அஸ்வின்)

மூன்றாவது ஒம்புட்ஸ்மன்   –     21.08.1993  – 30.11.1994     

திரு.டி.எச்.ஜே. அபேகுணசேகர ( இலங்கை நிர்வாகசேவை)

(கொன் ஹரி ஐஸ்டின் அபகுணசேகர)

நாலாவது ஒம்புட்ஸ்மன்  –  23.01.1995  –  25.08.2000 

பேராசிரியர் பி.ஈ.எஸ்.ஜே.பஸ்தியாம்பிள்ளை (பர்டரம் எமில் சேயின்ட்)

வரலாறு மற்றும் அரசியல் விஞ்ஞான பீடம்- கொழும்பு பல்கலைக்கழகம்.

ஐந்தாவது ஒம்புட்ஸ்மன்  –  01.06.2001  –  06.02.2010    

கலாநிதி ஆர். பி. ரணராஜா (முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி)
( ரஞ்சித் பண்டார ரணராஜா)

6ஆவது ஒம்புட்ஸ்மன் – இல் இருந்து  23.06.2010 – 22.01.2019 வரை  

திரு. எல். ஏ. திஸ்ஸ ஏக்கநாயக்க

(லங்காநந்த அசங்க திஸ்ஸ ஏக்கநாயக்க)

(ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி)

ஏழாவது ஒம்புட்ஸ்மேன் – 30.01.2019 – 31.03.2023
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.சித்ரசிறி