சேவைபெறுநர் பட்டயம்

 

  • அரசாங்க திணைக்களங்கள், அரசாங்க கூட்டுத்தாபனங்கள், மாகாண சபைகள் அல்லது அத்தகைய ஏனைய நிறுவனங்கள் என்பவற்றில் பணிபுரியும் அலுவலர்களால் புரியப்பட்ட அடிப்படை உரிமை மீறல்கள் அல்லது அதனையொத்த வகையான அநீதிகளை ஒழிக்கும் பொருட்டு பொதுமக்களால் ஒம்புட்சுமானுக்கு முன்வைத்த முறைப்பாடுகள் தொடர்பில் புலனாய்வை நடாத்துதலும், தவறாக வழங்கப்பட்ட நிர்வாக தீர்மானங்கள் தொடர்பில் கோரிக்கை விடுத்தலும் ஆலோசனை வழங்குதலும் மற்றும்/அல்லது பரிந்துரை வழங்குதலும் ஆகும்.

 

  • பாராளுமன்ற உறுப்பினரொருவரால் பாராளுமன்ற பொதுமனுக்கள் குழுவின் ஊடாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் ஏதாவது உரிமை மீறலொன்றிற்குள் உள்ளடங்குமாயின் அம்முறைப்பாடுகள் தொடர்பில் இவ்வலுவலகம் புலனாய்வு செய்து தீர்வுகளை வழங்குகிறது.

 

  • எமது நிறுவனத்தின் பிரதான பணிகளுக்கு அமைய, எமது நாட்டின் நீதிகள் மற்றும் அதற்கு அமைய உருவாக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் என்பவற்றிற்கு உட்பட்டு இலங்கை அரசாங்கத்தின் நிர்வாகப்பொறிமுறையொன்றின் ஊடாக, அடிப்படை உரிமை மீறல்களால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகும்.

  • அரசாங்க திணைக்களங்கள், அரசாங்க கூட்டுத்தாபனங்கள், மாகாண சபைகள் அதேபோன்ற ஏனைய நிறுவனங்கள் என்பவற்றில் பணிபுரியும் அலுவலர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் பாதிப்படைந்த பொதுமக்களே பயனாளிகள் ஆவார்கள்.
  • இறுதியாக, எமது நாட்டின் சகல நிர்வாக முறைமையை தரமுயர்த்துவதே எமது பணியாகும்.

எமது நிறுவனத்திற்கு முறைப்பாடுகள் தாக்கல் செய்யும்போது பின்வரும் முக்கியமான வழிமுறைகள் பின்பற்றுதல் வேண்டும்.

  • முறைப்பாடுகள் ஆவண ரீதியான சான்றுகளுடன் எழுத்தில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் அத்துடன் இம்முறைப்பாடுகள் தவறான நிர்வாகத் தீர்மானத்துக்கு எதிரானதாக இருத்தல் வேண்டும்.
  • விடயங்கள் சரியாக சமர்ப்பித்தல் அவசியம் “OMB 01” சரியாக பூரணப்படுத்தப்படுதல் வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து தெளிவானதும், சரியானதுமான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு இவ்வழிமுறை எமக்கு வசதியாக இருப்பதுடன், குறுகிய காலப்பகுதியினுள் நிவாரணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

1994 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டவாறான 1981 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு  அமைய, நிர்வாகத்திற்கான பாராளுமன்ற  ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலே கூறப்பட்ட சட்டத்தின் பரப்பளவினுள் உள்ளடங்காத முறைப்பாடுகள் தொடர்பில், அம்முறைப்பாடு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் உடனடியாக முறைபாட்டாளருக்கு அறியத்தரப்படும்.

முறைப்பாடொன்று கிடைத்த திகதியிலிருந்து குறைந்தது 03 நாட்களுக்குள் முறைபாடு சம்பந்தமாக எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கை தொடர்பில்  ஆரம்ப தீர்மானமொன்று எடுக்கப்படும்.

முதல் நடவடிக்கையாக பிரதிவாதி குழுவிடமிருந்து அறிக்கை கோரப்பாடும். அதன்பின்னர் அவ்வறிக்கை ஆய்வுசெய்யப்படும். அறிக்கைகளில் காணப்படும் விடயங்களை கவனமாக கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்குவதற்கு முயற்சி எடுக்கப்படும்.

இப்பிரச்சனை மிகவும் சிக்கலானதாக காணப்படும் சந்தர்ப்பத்தில் சகல குழுக்களும் விசாரணைக்கு அழைக்கப்படும் அதன்பின்னர் ஏதாவது அநீதி ஏற்பட்டிருப்பின் அதனை நிவர்த்தி செய்வதற்கு பொருத்தமான சிபாரிசுகள் வழங்கப்படும்.

பின்வரும் விடயங்கள் ஒம்புட்சுமானின் தொழிற்பரப்பினுள் உள்ளடக்கப்படமாட்டாது.

  • தொழில்கள்/வீடுகளுக்கான கோரிக்கைகள். ( சட்டத்தின் பிரிவு 10 (2).
  • பொதுமக்கள் பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் தொடர்புபட்ட விடயங்கள். (சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (1) .
  • ஆயுதப்படைகள், பொலிஸ் படைகள் அல்லது பொதுமக்கள் ஒழுங்கைப் பேணுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள ஏனைய படைகளில் உறுப்பினரொருவரின் சேவை நியதிகள் நிபந்தனைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் (சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (111)
  • நீதிமன்றத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானமொன்று அல்லது நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள விடயங்கள் ( சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (​iv) ).
  • அரசாங்க அலுவலர்களின் நியமனங்கள், இடமாற்றங்கள், பதவி விலகல்கள் அல்லது ஒழுக்காற்று கட்டுப்பாடுகள் தொடர்பிலான முறைப்பாடுகள். (சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (v).
  • கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் கணக்காய்வு செய்தல் தொடர்பிற்குட்பட்ட, உட்படுகின்ற விடயங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள். (சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (vi)
  • முறைப்பாட்டாளர் முறைபாடு செய்வதில் காலதாமதம் ஏற்படுதல் (நியாயமற்ற காலதாமதம்) (சட்டத்தின் பிரிவு 13 (1) (இ) ).
  • பொதுகொள்கைகள் அல்லது அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பிலான விடயங்கள்.
  • தேர்தல் ஆணையாளரின் தேர்தல் நடவடிக்கைகள்.
  • சொந்த கம்பனிகள் உள்ளடங்கலாக சொந்த குழுக்களுக்கிடையிலான பிரச்சனைகள் தொடர்பிலான முறைப்பாடுகள்
  • அநாமோதைய அல்லது கையொப்பமிடப்படாத முறைப்பாடுகள்.
எமது நிறுவனத்திடமிருந்து நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் இலங்கை பிரசைகள் மேலே சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை அறிந்துகொள்வார்களாயின் காலதாமதமின்றி எமது சேவையை திறனுடன் வழங்குவதற்கு உதவியாக இருக்கும்.