ஒம்புட்சுமானுக்கு முறைப்பாடொன்று தாக்கல் செய்யும் வழிமுறை
1994 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க (திருத்தம்) நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஏதாவது அநீதி தொடர்பில் நபரொருவர் ஒம்புட்சுமானுக்கு நேரடியாக எழுத்தில் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு உரித்துடையவராவார். இவ்வலுவலகத்தினால் வழங்கப்படும் “ ஒஎம்பி -01” படிவத்தில் அவசியமான தகவல்கள் சமர்ப்பிக்கப்படுமானால் விசாரணை நடத்துவது வசதியாக இருக்கும். முறைப்பாடுகளை அலுவலகத்திற்கு வருகை தந்து சமர்ப்பிக்கலாம் அல்லது பதிவுத்தபால் மூலம் சமர்ப்பிக்கலாம் அல்லது சதாரண தபால் மூலம் சமர்ப்பிக்கலாம் அல்லது மின் அஞ்சல் செய்தி( E-Mail message) மூலம் சமர்ப்பிக்கலாம்.

அதேபோல், புலனாய்வு செய்து அறிக்கையிடும் பொருட்டு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, கௌரவ சபாநாயகர் ஊடாக பாராளுமன்ற உறுப்பினரொருவர் மூலம் பொதுமனுக்கள் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகள் ஒம்புட்சுமானுக்கு குறித்துரைக்கப்படுகின்றது.
முறைப்பாடொன்றினுள் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கியமான விடயங்கள்
- முறைப்பாடு சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிமையான மொழியில் (சிங்களம்/தமிழ்/ஆங்கிலம்) முன்வைக்கப்படுதல் வேண்டும்.
- எத்தீர்மானத்துக்கு எதிராக முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் எவ்வலுவலருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படுகிறதோ அவ்வலுவலரின் பதவியையும் அலுவலக முகவரியையும் தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும்.
- இழைக்கப்பட்ட அநீதியை எண்பிப்பதற்கான முக்கியமான ஆவணங்களின் புகைப்பட பிரதிகளை இணைப்பது பொருத்தமானதாக இருக்கும்.
- உங்கள் முறைப்பாடு தொடர்பில் இறுதியில் நீங்கள் எதிர்பார்க்கும் குறைதீர்வை தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும்.
முறைப்பாடொன்றைப் பெற்ற பின்னர் ஒம்புட்சுமனால் எடுக்கப்படும் நடவடிக்கை
முறைப்பாட்டின் இயல்புக்கு ஏற்ப தாமதமின்று குறைதீர்வை வழங்குவதற்கு பின்வரும் முறையில் புலனாய்வை மேற்கொள்ளுவார்.
- முதல்படியாக கிடைக்கபெற்ற முறைப்பாடொன்று நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் எல்லைக்குள் உள்ளடங்குகிறதா என தீர்மானம் எடுத்தல் வேண்டும்.
- அம்முறைப்பாடில் குறித்துரைக்கப்பட்ட விடயங்கள் இவ்வலுவலக எல்லைக்குள் உள்ளடங்குமானால் அவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு எதிர்வாதியிடமிருந்து அறிக்கை கோரப்படும். வழமையாக ஏற்புடைய அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இரண்டு கிழமைகள் வழங்கப்படும்.
- அறிக்கையில் காணப்படும் விடயங்களை கவனமாக அவதானத்தில் கொண்டு அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். அறிக்கைகள் கோரப்பட்ட பின்னர் இழைக்கப்பட்ட அநீதிக்கான காரணம் சரிப்படுத்தப்பட்டால் முறைப்பாட்டாளருக்கு இவ்விடயம் உடனடியாக அறிவுறுத்தப்படும். அவ்வாறு சரிப்படுத்தப்படாதுவிட்டால், தேவைப்பட்டவாறு மேலும் கடிதங்கள் மூலம் விசாரணைகள் நடாத்தப்படும்.
- இவ்வாறு கடிதப்பரிமாற்றம் மூலம் முறைப்பாட்டாளருக்கு குறைதீர்வு வழங்கி இவ்வலுவலகத்திற்கு அலுவலர்கள் சமுகமளித்தலை இயலுமானவரையில் குறைக்கும் வகையில் சாத்தியமான முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
- முறைப்பாட்டாளருக்கு அநீதி இழைக்கப்படவில்லை என கடித தொடர்பில் எண்பிக்கப்பட்டால், இவ்விடயம் அதிகாரிகளுக்கும் முறைப்பாட்டாளருக்கும் அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- கடிதம் அனுப்புதல் மூலம் தீர்மானமொன்று எடுப்பது கடினமாக காணப்படுமிடத்து சகல குழுக்களுக்கும் விசாரணைக்காக அழைப்பாணை விடுக்கப்பட்டு இவ்விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்படும்.
- ஒம்புட்சுமானால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்/பரிந்துரைகள்/ஆலோசனைகள் முறைப்பாட்டாளருக்கும் ஏற்புடைய அதிகாரிகளுக்கும் எழுத்தில் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஒம்புட்சுமனால் எடுக்கப்பட்ட தீர்மானம்/பரிந்துரை/ஆலோசனையை குறிப்பிட்ட காலத்திற்குள் பிரதிவாதியை அமுல்படுத்துமாறு ஒம்புட்சுமான் கோருவார்.
- நிறுவனத்தலைவர் (அதிகாரம் பெற்ற அலுவலர்) கூறப்பட்ட பரிந்துரையை அமுல்படுதாவிட்டால், அவ்வாறு குறித்துரைக்கப்பட்ட காலத்தினுள், போதியதாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையாயின், ஏற்புடைய நிறுவனத்தலைவரினால் செய்யப்பட்ட அவதானிப்புக்கள் ஏதும் இருப்பின் அவற்றை சீர்தூக்கி பார்த்த பின்னர் ஒம்புட்சுமான் தமது பரிந்துரையுடன் இறுதி அறிக்கையை 1994 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க திருத்த சட்டத்தில் கூறப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அதிமேதகு சனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிப்பார்.
- சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய முறைப்பாட்டாளரொருவர் சட்டத்தரணியின் அல்லது பாதுகாப்பு அதிகாரியின் உதவியைப் பெறுதல் அனுமதிக்கப்படமாட்டாது. எவ்வாறாயினும் முறைப்பாட்டாளர் உடல் அல்லது இனங்காணக்கூடிய தளர்ச்சிக்கு உட்பட்டிருப்பின் தனது உதவியாளரின், உறவினரின் அல்லது ஆதரிப்பாளரின் உதவியை ஒம்புட்சுமானின் விருப்பத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.
- முறைப்பாட்டின் இயல்பு மற்றும் பிரதிவாதியினால் வழங்கப்படும் பதில் என்பவற்றுக்கு அமையவே குறைதீர்வு வழங்கும் கால அளவு அமைந்திருக்கும். பிரதிவாதி தாமதமின்றி அறிக்கை சமர்ப்பிப்பாரானால் இடருற்றவருக்கு விரைவில் குறைதீர்வு வழங்குவதற்கு உதவியாக இருக்கும். எவ்வாறாயினும் முறைப்பாட்டை கோவையிட்ட திகதியிலிருந்து மூன்று மாத காலங்களினுள் பரிந்துரைகளை வழங்குவதற்கு முயற்சி எடுக்கப்படும். எனினும் முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட திகதியிலிருந்து ஒரு வருட காலத்தினுள் இறுதித் தீர்மானத்தைப் பெற்றுக்கொள்ள தீவிர முயற்சி எடுக்கப்படுகிறது.
ஒம்புட்சுமானால் புலனாய்வு செய்யப்படாத முறைப்பாடுகள்
- தொழில்கள்/வீடுகளுக்கான கோரிக்கைகள். ( சட்டத்தின் பிரிவு 10 (2).
- பொதுமக்கள் பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் தொடர்புபட்ட விடயங்கள். (சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (1) .
- ஆயுதப்படைகள், பொலிஸ் படைகள் அல்லது பொதுமக்கள் ஒழுங்கைப் பேணுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள ஏனைய படைகளில் உறுப்பினரொருவரின் சேவை நியதிகள் நிபந்தனைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் (சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (111)
- நீதிமன்றத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானமொன்று அல்லது நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள விடயங்கள் ( சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (iv) ).
- அரசாங்க அலுவலர்களின் நியமனங்கள், இடமாற்றங்கள், பதவி விலகல்கள் அல்லது ஒழுக்காற்று கட்டுப்பாடுகள் தொடர்பிலான முறைப்பாடுகள். (சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (v).
- கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் கணக்காய்வு செய்தல் தொடர்பிற்குட்பட்ட, உட்படுகின்ற விடயங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள். (சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (vi)
- முறைப்பாட்டாளர் முறைபாடு செய்வதில் காலதாமதம் ஏற்படுதல் (நியாயமற்ற காலதாமதம்) (சட்டத்தின் பிரிவு 13 (1) (இ) ).
- பொதுகொள்கைகள் அல்லது அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பிலான விடயங்கள்.
- தேர்தல் ஆணையாளரின் தேர்தல் நடவடிக்கைகள்.
- சொந்த கம்பனிகள் உள்ளடங்கலாக சொந்த குழுக்களுக்கிடையிலான பிரச்சனைகள் தொடர்பிலான முறைப்பாடுகள்
- அநாமோதைய அல்லது கையொப்பமிடப்படாத முறைப்பாடுகள்.
